கர்த்தரையே துதிப்பேன்

காலமெல்லாம் துதிப்பேன்

வல்லவர் நல்லவர் கிருபையுள்ளவர்

என்றே பாடுவேன் நான்

 

1.

நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி

கதறி கூப்பிட்டேன்

நெருங்கி வந்து குரலைக் கேட்டு

விடுதலை கொடுத்தார் – கர்த்தரையே

 

2.

எனக்குதவும் கர்த்தர் எனது

நடுவில் இருக்கிறார்

எதிரியான அலகையை நான்

எதிர்த்து வென்றிடுவேன் – கர்த்தரையே

 

3.

எனது பெலனும் எனது மீட்பும்

கீதமுமானார்

நம்பியிருக்கும் கேடயமும்

கோட்டையுமானார் – கர்த்தரையே

 

4.

கர்த்தர் எனது பக்கம் இருக்க‌

எதற்கும் பயமில்லை

கடுகளவு பாவம் என்னை

அணுக முடியாது – கர்த்தரையே

 

5.

வல்லமை மிக்கவர் செயல்கள் பல‌

எனக்குச் செய்தாரே

உயிரோடிருந்து உலகத்திற்கு

எடுத்துச் சொல்லுவேன்  – கர்த்தரையே

 

6.

வீடு கட்டுவோர் புறக்கணித்தது

மூலைக்கல்லாயிற்று

கர்த்தரே செய்தார் கண்களுக்கெல்லாம்

ஆச்சரியம் இது – கர்த்தரையே



karthdharaiye thuthibben

kalamellam thuthibben

vallavar nallavar kirubaiyullavar

enre baduven nan

 

1.

nerukkaththile karthdharai nokki

kadhari kubbidden

nerungki vanththu kuralaik keddu

vidudhalai koduththar – karthdharaiye

 

2.

enakkudhavum karthdhar enathu

naduvil irukkirar

ethiriyana alakaiyai nan

ethirththu venriduven – karthdharaiye

 

3.

enathu belanum enathu midbum

kidhamumanar

nambiyirukkum ketayamum

koddaiyumanar – karthdharaiye

 

4.

karthdhar enathu pakkam irukka‌

edharkum payamillai

kadukalavu bavam ennai

anuka mudiyathu – karthdharaiye

 

5.

vallamai mikkavar seyalkal pala‌

enakkus seythare

uyirodirunththu ulakaththirku

eduththus solluven  – karthdharaiye

 

6.

vidu kadduvor burakkanithdhathu

mulaikkallayirru

karthdhare seythar kankalukkellam

aaschariyam ithu – karthdharaiye